விநாயகர் சதுர்த்தி விளக்கு பூஜையில் இசைக்கருவிகளை வாசித்த ரோபோ விநாயகர்கள் : கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ரோபோ விநாயகர்கள் இசைக்கருவிகளை வாசித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.


கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ரோபோ விநாயகர்கள் இசைக்கருவிகளை வாசித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நூதன முறையிலான வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோவை சாய்பாபா காலனி அண்ணா நகர் பகுதியில் உள்ள விவேகானந்தர் இளைஞர் பொதுநல மன்றம் சார்பில் 21-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. 8 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றது. 



இதன் ஒரு பகுதியாக விநாயகர்,முருகன் மற்றும் அம்மனுக்கு 158 விளக்கு பூஜை நடைபெற்றது. விழக்கு பூஜையின் ஒரு பகுதியாக 5 ரோபோ விநாயகர்கள் அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோபோ விநாயகர்கள் கீபோர்ட், கிட்டார், டிரம்பெட், வயலின் மற்றும் டிரம்ஸ்கள் இசைத்தது பொதுமக்களையும், பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல, பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் விளக்கு பூஜைகளும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.

இன்று மாலை பெரும்பாலான இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளங்களில் கரைக்கப்பட உள்ளன. இதனையொட்டி, ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யபட்டு உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...