கோவை குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு : ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளிடமிருந்து குளத்தை பாதுகாக்க வருமாறு அழைப்பு

கோவை : குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட உள்ள நிலையில், ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளிடமிருந்து குளத்தை பாதுகாக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட உள்ள நிலையில், ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளிடமிருந்து குளத்தை பாதுகாக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு பாலக்காடு சாலை வழியாக சென்று குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுகிறது. அதேபோல, சுமார் இரண்டு மணிக்கு போத்தனூர் சாரதாமில் சாலையில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்றுகூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது.

இதில், குளங்கள் மாசுபடாதவாறு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்பட்ட சிலைகள் கரைக்க்ப்படுகின்றன. அதேவேளையில், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் குளங்களில் கரைக்கக் கொண்டு வரப்படுகின்றன. 

இந்த நிலையில், இன்று குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகளை கரைத்திடும் பொழுது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்பட்ட சிலைகளை பிரித்தெடுத்து குளத்தை மாசுபாட்டிலிருந்து காத்திட வருமாறு தன்னார்வலர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...