நீலகிரி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஒய்.பி.ஏ., அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் 160 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. சாதி, மதம் மொழி வேறுபாடின்றி நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி
பெண்களுக்கும் சேலை, வளையல் குங்குமம் உள்ளிட்ட தாம்பூல தட்டுடன் வழங்கப்பட்டது. முன்னதாக, விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வளையல் அணிவித்து சந்தனம் பூசி விழாவை சிறப்பித்தார். இதனையடுத்து, ஒவ்வொரு
கர்ப்பிணி பெண்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சேலை மற்றும் வளையல் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சம்பிரதாய முறைப்படி 6 வகையான உணவுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை செய்திருந்தனர். விழாவில் கர்ப்பிணி பெண்களின் கணவன்மார்கள் உட்பட ஏரளாமானோர் கலந்துகொண்டனர்.