நீலகிரி: குன்னூர் அருகே 70 அடி பள்ளத்தில் இருக்கும் வீட்டின் மீது கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பீகாரைச் சேர்ந்த பிரின்ஸ்ராஜன்( 27) இவரது மனைவி ஸ்னிக்தா (23) சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இவர்களுடன் பிரின்ஸ்ராஜனின் உறவினர்களான சென்னையில் பணியாற்றி வரும் பிரவீன்குமார் (30), ஜீனிஷ்தாகூர் (23) நேற்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை பிரின்ஸ்ராஜன் ஓட்டிவந்தார். அப்போது, கார் குன்னூர் ஊட்டி சாலை பெரியபிக்கெட்டி அருகே சாய்பாபா கோவில் வளைவில் வேகமாக திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து 70 அடிபள்ளத்திலுள்ள ஒரு குடியிருப்பின் மீது விழுந்தது.
அப்போது, வீட்டில் துங்கிகொண்டிருந்த ராஜம்மாள் (77) அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உடனே அவர் வீட்டிலிருந்து வெளியே வந்து சத்தமிட்டார். உடனே அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில், காரில் இருந்த அனைவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்களுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அரவங்காடு காவல் நிலையஆய்வாளர் வெங்கடேஷன் விசாரணை செய்து வருகிறார்.