நீலகிரி : உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீலகிரி: உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், தேவாலா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடை விடாமல் தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில், மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கனமழையின் காரணமாக நகரில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.