மோடி பிரதமராக இல்லை, இன்னும் பா.ஜ.க., தலைவராகவே செயல்படுகிறார் : திருப்பூரில் முகுல் வாஸ்னிக் விமர்சனம்

திருப்பூர்: மோடி நாட்டின் பிரதமராக இல்லாமல் இன்னும் பா.ஜ.க.,வின் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொறுப்பாளார் முகுல் வாஸ்னிக் விமர்சித்துள்ளார்.

திருப்பூர்: மோடி நாட்டின் பிரதமராக இல்லாமல் இன்னும் பா.ஜ.க.,வின் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொறுப்பாளார் முகுல் வாஸ்னிக் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு பாதுகாப்புத்துறை சார்பில் பெறப்பட்ட ரபேல் போர் விமான வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற துணைக்குழு அதனை விசாரிப்பதற்கு முன்வர வேண்டும் எனக் கோரி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 



பேரணியின் போது செய்தியாளர்களிடம் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பேசியதாவது :- ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையாக செயல்படவில்லை. இதில், 41,000 கோடி வரை ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது சாமானியர்களின் பணம். இந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு அரசு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இதனால், நாடாளுமன்ற துணைக்குழு முறையான விசாரணை நடத்திட வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நாட்டின் பிரதமராக இருக்க வேண்டிய மோடி, இன்னும் பா.ஜ.க.,வின் தலைவராகவே உள்ளார். 

ஊர்வலத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியினர் ரபேல் போர் விமான ஊழலை குடியரசுத்தலைவர் விசாரணைக்கு உத்தரவிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...