குன்னூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி: குன்னூர் மவுண்ட் ரோடு சின்னபள்ளி வாசல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி: குன்னூர் மவுண்ட் ரோடு சின்னபள்ளி வாசல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குன்னூரில் உள்ள சின்னபள்ளிவாசலுக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தவரும் மதுப்பிரியர்களால் பக்தர்களும், இதன் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஐதர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்கள் எடுக்கப்பட்டன. 

மேலும், சின்னப்பள்ளி வாசல் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஒரு வழித்தடத்தில் மதுகுடிப்பவர்கள் நின்று கொண்டு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதால் அந்த தடத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும், விரைவில் மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடையை தாங்களே அகற்றுவோம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...