திருப்பூர்: திருப்பூரில் பாதாள சாக்கடை உடைந்து நல்ல தண்ணீர் குழாயுடன் கலந்து செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தில்லை நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதியில் சாலை ஓரத்தில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வெளியேறியுள்ளது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கும், சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இந்தக் கழிவுநீர் குடிதண்ணீர் சப்ளை செய்யும் குழாயுடன் கலந்துசெல்வதால், குடிதண்ணீரும் துர்நாற்றத்துடன் வருவதாகவும் இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.