கோவை: எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய புத்தகம் கோவையில் வெளியிடப்பட்டது.

'தி மேன் ஃகூ சேவ்டு இண்டியா - சர்தார் வல்லபாய் படேல் அன்ட் ஹிஸ் ஐடியா ஆப் இண்டியா' (The Man Who Saved India - Sardar Patel and his Idea of India) என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா எழுதினார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா எஸ்.என்.ஆர்., கலையரங்கில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி சாம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் புத்தகத்தின் முதல் பிரதியை ரவி சாமுக்கு எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா வழங்கினார். பின்னர், எழுத்தாளரின் கையெழுத்துடன் இடம்பெற்ற புத்தகங்கள் எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் தலைமை வர்த்தக அலுவலர் ஸ்வாதிரோகித் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கே. கருணாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா பேசியதாவது :- சர்தார் வல்லபாய் படேலின் பெருமையை ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைத்துப் போற்ற வேண்டும். ஏனெனில், அரசியல் போர்வை இல்லாமல் வல்லபாய் படேலை தவிர்த்து இந்தியாவை வேறு யாராலும் பாதுகாத்திருக்க முடியாது. பிரிட்டீஷாரிடம் இந்தியாவை, ஜனநாயக நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாற்றியதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு மகத்தானது.
மகாத்மா காந்திக்கு சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவுக்கு கருத்துவாதம் எனில், சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் நகர்வு என்றால் வல்லபாய் படேலின் நடைமுறைவாதமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட படேலுக்கு அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்கு பிறகே, அதாவது 1991-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, என்றார்.