நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மாலையில் இந்த சிலைகள் குண்டாறில் கரைக்கப்படுவதாக இருந்தது.
இதனிடையே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும் போது மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது செங்கோட்டையில் மீண்டும் விநாயகர் சிலைகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால், அங்கு தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்