வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்யலாம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி: வரதட்சணை தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: வரதட்சணை தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம் என்று மத்திய அரசு கடந்த 1961-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது இந்த சட்டத்தின் பிரிவு 498(ஏ)-ன் படி நடவடிக்கை எடுக்க பல்வேறு தண்டனைகள் வரையறுக்கப்பட்டன.

வரதட்சணை கேட்டு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டால், கணவர், மாமனார், மாமியாருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கவும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும் அந்த சட்டப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் அடைந்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. கணவனையும், கணவர் குடும்பத்தினரையும் பழிவாங்க இந்த சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டது. எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் வரதட்சணை தொடர்பான வழக்கில் யாரையும் உடனே கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'வரதட்சணை புகார்களில், குற்றம் சுமத்தப்பட்டவர்களை உடனே கைது செய்யலாம். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.' என்று கூறப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் 498(ஏ) பிரிவின் கீழ் கைது செய்யப் படுபவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதில்லை. இந்த சட்ட பிரிவு தான் மிகவும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

எனவே 498(ஏ) சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப் படுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்றும், முன் ஜாமீன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவுகள் காரணமாக வரதட்சணை குற்றச்சாட்டுக் குள்ளானவர்கள் கைது செய்யப்பட்டாலும் உடனே ஜாமீனில் வெளியில் வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...