நீலகிரி: கேரளாவில் இருந்து வந்து முதுமலை தெப்பக்காடு பகுதியில் பயிற்சி பெற்ற மூன்று யானைகள், மீண்டும் கேரளா திரும்பின.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் உள்ள கும்கி யானைகள் மூலம், கேரள யானைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக கும்கி யானைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நகரப் பகுதிகளுக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தமிழக கும்கி யானைகள் அந்த மூன்று யானைகளுக்கும் பயிற்சி அளித்தன.

முதுமலை தெப்பக்காடு பகுதியில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி, நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மூன்று கேரள யானைகளையும், அதன் பாகன்கள் இன்று கேரளா அழைத்துச் சென்றனர்.