கோவை : சாய்பாபா காலனி பகுதியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிப்பதற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டதால், பல லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடியது.

கோவை நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், குழி தோண்டும்போது தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீரும் வீணாக சாலைகளில் ஓடுகிறது.
சாய்பாபா காலனியில் உள்ள பாரதி பார்க் மற்றும் கே.ஜி.லே அவுட் குடியிருப்பு பகுதிகளில் ஏர்டெல் நிறுவனம் கேபிள் பதிக்கும் பணிகளை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. தார் சாலைகள் சிதைக்கப்படுவதால் இந்தப் பகுதிகளில் வாகன போக்குவரத்து சிக்கலாக மாறியுள்ளது. மேலும், குடிநீர் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் முறையான குடிநீர் வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

"சுமார் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு தொலைத்தொடர்பு கேபிள்கள் பாதிக்கப்படுகின்றன. நிலத்திற்கு அடியில் கேபிள் கம்பிகள் பதிக்கும்போது அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு குழாய்களில் சேதம் ஏற்படுத்துகின்றனர். தண்ணீர் வராதபோது சேதம் அடைந்த குழாயை மண்ணைக் கொட்டி தற்காலிகமாக அடைத்து சென்று விடுகின்றனர். தண்ணீர் வரும்போது மண் அடைப்பு உடைந்து பல லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகுகிறது. ஐந்து முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பெறுவதில் இன்னும் தாமதமாகி சிரமம் ஏற்பட்டுள்ளது' என்கிறார் கே.ஜி.லே அவுட்டில் வசித்து வரும் லட்சுமி.

இதேபோல, பாரதி பார்க் பி.எஸ்.என்.எல்., பூங்கா அருகே தொலைத்தொடர்பு கேபிள் பராமரிப்பு பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகின்றது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏர்டெல் நிறுவனம் ஹெச்.டி., கேபிள்கள் பதிப்பதற்காக சாய்பாபா காலனி முழுவதும் குழிகளை தோண்டியுள்ளது. நிலத்திற்கு அடியில் உள்ள குழாய் இணைப்புகள் அனைத்தும் பழைய முறையில் உருவாக்கப்பட்டவை. இவை அனைத்தையும் நவீன வடிவங்களில் மாற்றினால் மட்டுமே மற்ற குழாய்களில் சேதம் ஏற்படாமல் பராமரிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்," என்றார்.