கோவை: பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் மூழ்கியதோடு, அவற்றை காக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சேலைகளும் நீருக்கடியில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் கடும் இழப்பில் சிக்கித்தவிக்கின்றனர் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கைமேடு, இரும்பறை, புதுக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க நிலப்பகுதியான டேம்காடு என்னுமிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு
நாட்டுக்காய்கறி பயிர்கள் தவிர இங்கு மட்டும் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. வாழை உள்ளிட்ட பயிர்களை யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற இத்தோட்டங்களைச் சுற்றி சோலார் மற்றும் இரும்பு கம்பி வேலிகள் போடப்பட்டிருந்த நிலையில், வனவிலங்குகள் நீர் அருந்த இவ்வேலிகள் தடையாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த வேலிகள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து கம்பி வேலிகள் அனைத்தையும் அகற்றினர். வேலிகள் இல்லாத தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தியதால், வேறு வழியின்றி தங்களது தோட்டங்களைச் சுற்றி சேலைகளால் வேலி அமைத்தனர்.

பல, பல வண்ணங்களில் உள்ள புடவைகளை இணைத்து தடுப்பு அமைக்கப்பட்டதால் இவை காற்றில் அசையும் போது யானைகளும், பன்றிகளும் விளை நிலங்களுக்குள் புகாமல் பயந்து பின்வாங்கின. இதற்காக ஒரு ஏக்கருக்கு 400 சேலைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான பழைய சேலைகள் இப்பகுதி விவசாயிகளால் வாங்கப்பட்டு சேலை வேலிகள் அமைக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், கடந்த மாதம் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்த பெரும் மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானியாறு மேட்டுப்பாளையத்தைக் கடந்து பவானிசாகர் அணையைச் சென்றடையும் என்பதால் அந்த அணையின் நீர்மட்டமும் வெகு வேகமாக உயர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பவானிசாகர் அணை நிரம்பியது. பவானியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்களும் அடியோடு மூழ்கிப்போயின.
இதனோடு சேர்த்து இவற்றுக்கு வேலியாக பயன்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சேலைகளும் நீருக்கடியில் காணாமலே போயின. சற்றே மேடான இடங்களில் மட்டும் சில நூறு சேலைகள் நீருக்கு வெளியே தெரிகின்றன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் செலவழித்து பயிரிட்டு சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குலை தள்ளிய வாழை மரங்களும், ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கிய சேலைகளும் ஒரு சேர பாழானதால் மீள முடியாத இழப்பில் சிக்கி தவிக்கின்றனர் இப்பகுதி வாழை விவசாயிகள்.
ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இடத்தில் பயிரிட்டதால் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டப்படி இழப்பீடு கோர முடியாது என்பதால் செய்வதறியாது முடங்கி விட்ட விவசாயிகள், தங்களுக்கு விவசாயப் பணி மட்டுமே தெரியும் என்பதால் நீர்வடிந்த பின்னர் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள தமிழக அரசு எவ்வகையிலாவது தங்களுக்கு உதவிட வேண்டும் என வேதனையோடு கோரிக்கை விடுக்கின்றனர்.