மேட்டுப்பாளையத்தில் புதியதாக போடப்பட்ட சாலையில் சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து

கோவை: மேட்டுப்பாளையத்தில் புதியதாக போடப்பட்ட சாலையில் சென்று சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் புதியதாக போடப்பட்ட சாலையில் சென்று சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் முதல் கொண்டை ஊசி வரை சாலைகளை அகலப்படுத்தும் பணியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.24 கோடியில் 10 மீட்டர் அகலத்திற்கு இந்த பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் மோசமான நிலையில் உள்ள பாலங்களும் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகரின் மையப் பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகேயும் ஜி.எம்.ஆர்.சி பள்ளி சாலை அருகேயும் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த வழியே செல்ல வேண்டி உள்ளதால் பால வேலைகளை முடித்து வாகன சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் இரு சக்கர வாகனங்கள் பின்னர் ஆட்டோ, கார்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பேருந்துகளை இயக்கி சோதனை செய்த போது அரசுப் பேருந்து மண்ணில் புதைந்து மாட்டிக் கொண்டது. பேருந்தின் சக்கரம் முழுவதும் மண்ணில் புதைந்து மாட்டிக் கொண்டதால் கிரேன் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பேருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, "பாலம் அமைந்துள்ள இடத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள குழியில் மண் நிரப்பப்பட்டுள்ளது. இதில் மண் நன்றாக இருக்கமடையாத காரணத்தால் பேருந்து மண்ணில் சிக்கியது. அதனை இன்று முழுவதுமாக சரி செய்த பின்னர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்." என தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...