திருப்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிறையிலடைப்பு

திருப்பூர் : திருப்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியையும் போலிசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியையும் போலிசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் பகுதியைச் சேர்ந்த இளங்கோ. இவர் திருப்பூர் மாநகராட்சி 28 வது வார்டு அதிமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். உணவகம் நடத்தி வரும் இவர் அப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த திங்களன்று மதியம் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்த இளங்கோவை தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திருநீலகண்டபுரம் இரண்டாவது வீதி அருகே வரும்போது ஆயுதங்களுடன் இளங்கோவை தாக்கியுள்ளனர். இதில் இளங்கோ இரத்தகாயங்களுடன் சரிந்து விழுந்ததில் அதிகளவிலான இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பலியானார். 



இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரத்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக செந்தமிழின், கோபி ஆகியோரை ஏற்கனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த தாமோதரனையும் நேற்று திருப்பூர் வடக்கு போலிசார் கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச்சென்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...