திருப்பூர் : திருப்பூரில் காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவர் திருப்பூர், கே.பி.என் காலனி பகுதிகள் குடும்பத்தோடு தங்கி பனியன் நிறுவனத்தில், வேலை செய்து வருகிறார். இவரது மகள் திவ்யா. அதேபோல மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சேதுபாண்டி என்பவரது மகனான அருண்பாண்டி, திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூம்மில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், திவ்யாவுக்கு, அருண்பாண்டியுடன் கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது, காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரிந்து முதலில் கண்டித்துள்ளனர். பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருண் பாண்டியின் தந்தை சேதுபாண்டி இறந்துவிட்டார். இதனால், திவ்யா, அருண்பாண்டியின் காதல் திருமணம் தடைபட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு திவ்யாவை, முத்தணம்பாளையத்தையடுத்த பொன்முத்துநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருமாறு அருண்பாண்டி அழைத்துள்ளார். இதையடுத்து, மறுநாள் ஊருக்குச் சென்ற உறவினர்கள் வீடு திரும்பி பார்க்கையில், காதலர்கள் இருவரும் புத்தடை உடுத்தி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.