திருப்பூர் : திருப்பூரில் மண்ணரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆட்டோ ஓட்டுனராகவும் இவருடைய மனைவி பிரவீனா அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஸ்மித்திகா என்ற மகள் உள்ளார். இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே ஜி படித்து வருகிறார்.
திருப்பூர் : கடந்த சில தினங்களாக தனது அம்மா அடித்ததற்கு திட்டாம அடிக்காம வாயில குணமா வாயில சொல்லனும் என்று அறிவுரை கூறும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூரில் மண்ணரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆட்டோ ஓட்டுனராகவும் இவருடைய மனைவி பிரவீனா அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஸ்மித்திகா என்ற மகள் உள்ளார். இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே ஜி படித்து வருகிறார்.

சிறுமி ஸ்மித்திகா பற்றி அவரது அம்மா பேசுகையில், "பள்ளியில் சேர்த்தது முதலே படிப்பில் மட்டுமல்லாது, நடனம், ஓவியம், உள்ளிட்ட வற்றில் சிறந்து விளங்கி வருவதாகவும், கடந்த 2 வாரத்திற்கு முன் பள்ளிக்கு சென்ற ஸ்மித்திகாவிற்க்கு ஸ்நாகஸ்( SNACKS ) கொடுத்துவிட்டதை சாப்பிடாமல் திருப்பிக் கொண்டு வந்ததாகவும், இது குறித்து சிறுமியின் தந்தை பிரகாஷ் கேட்ட போது சிறுமி ஸ்மித்திகா அவரது தந்தையை அடித்ததாக கூறினார்.

இதனால் நான் கையில் லேசாக அடித்துவிட்டு, மிரட்டியதால், திட்டாம அடிக்காம வாயில குணமா சொல்லனும் என்று ஸ்மித்திகா தனக்கு அறிவுரை கூறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர், தற்போது இணையத்தில் சிறுமியின் விடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும், சிறுமி ஸ்மித்திகாவிடம் பேசுகையில், "தல அஜித்குமாரை பார்த்து பைக்கில் செல்ல வேண்டும் என்பதே தனது ஆசை என்று குணமாக சொல்கிறார் சிறுமி ஸ்மித்திகா".