புகழ்பெற்ற வலி நிவாரணிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் சேரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும். அதேசமயம், டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.
2016-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர் மேலும், 5 மருந்துகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தடை விதிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்யும்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தை கேட்டுக் கொண்டது. அதன்படி, மேற்கொண்ட ஆய்வில், 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.