கோவை : மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்த மதுக்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மர்ம நபர்கள் வீடு புகுந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கொள்ளையர்களை பிடித்து, கொள்ளைக் குற்றங்களை தடுப்பது கோவை மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தக் கொள்ளையர்கள் குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில், பேரூர் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில், வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, மதுக்கரை ஆய்வாளர் தங்கபாண்டியன், உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், நாகராஜ், சாஜஹான், தலைமை காவலர்கள் சஞ்சித், சதீஸ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வாகன சோதனை, சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரிப்பது, பழைய குற்றவாளிகள், வடமாநிலத்தவர் என பல தரப்பினரை பல்வேறு வகையில் விசாரணை செய்து வந்தனர்.
அதேபோல, தடையங்கள் இன்றி தொடர்ந்து திருட்டு நடந்த இடங்கள் அருகே இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் என அனைத்தையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29), சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராஜா என்கிற மாணிக்கராஜா (28), சென்னை பொலிச்சலூரை சேர்ந்த ஹரிஹரன் (27) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுக்கரை மற்றும் கோவையில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பங்களில் இவர்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கார், 2-எல்.இ.டி.டிவி., ஹோம் தியேட்டர், 6 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ராஜா என்பவர் மீது சென்னையில் 70 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.