கோவை : அழுகக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பாண்டுடு டிரக் சர்வீஸ் கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
கோவை : அழுகக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பாண்டுடு டிரக் சர்வீஸ் கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெரும்பாலான சரக்குகள் கோவை விமான நிலையத்தில் இருந்து பாண்டுடு டிரக் சர்வீஸஸ் மூலம் வேறொரு விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோவையில் இருந்து நேற்று தொடங்கிய இந்த சர்வீசஸை விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல்முறையாக தொடங்கப்பட்ட இந்த சேவையில் காய்கறிகள், பழங்கள் என 2.5 எடையுள்ள பொருட்கள் கொச்சின் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதிக்கு சவுதி அரேபியா ஏலைன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக சரக்கு விமானப் போக்குவரத்து துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியதாவது :- முன்பு இருந்த சரக்குப் போக்குவரத்து தொழில்துறை தொடர்பான சரக்குகளை மட்டுமே எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கோவை - கொச்சின் இடையே சிறந்த சாலை போக்குவரத்து கட்டமைப்புகளை கொண்டுள்ளது. எனவே, அழுகக்கூடிய சரக்குகளையும் எளிதில் எடுத்துச் செல்ல முடிகிறது. அதேவேளையில், கோவை - கொச்சின் இடையே குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 இணைப்புச் சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், கோவை சரக்கு விமானப் போக்குவரத்து பல்வேறு விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை, பெங்களூரூ, கொச்சினில் இருந்து கத்தே பசிபிக், எமிரேட்ஸ் மற்றும் பிரிட்டீஸ் ஏர்வேஸின் சரக்கு விமானங்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேவையை வழங்க இருக்கிறது. இந்த சேவையின் மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
100 டன் அளவு சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கோவை சரக்கு விமானத்தின் மூலம் 2017-2018 ஆம் ஆண்டுகளில் மட்டும் 3,200 டன் சரக்குகள் கொண்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.