கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணியின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட மேட்டுப்பாளையம் நகரம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. களி மண்ணால் ஆன ஒரு அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை முதல் அனைத்து சிலைகளுக்கு முன்பும் கணபதியோகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர், விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, அவல், சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், மூன்று நாள் வழிபாட்டிற்கு பின்னர், வரும் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பதற்றமான பகுதி என்பதால் சிலை கரைப்பு ஊர்வலத்தன்று கோவை மாவட்ட எஸ்.பி., தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.