திருப்பூர் : குட்கா விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூரில் தமாகா கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே,வாசன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விளையாடி 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்ற திருப்பூரை சேர்ந்த விளையாட்டு வீரர் தருண் அய்யாசாமியை நேரில் பாராட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 50 ஆயிரம் ஊக்கத்தொகையினை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது சிபிஐ குட்கா விசாரணை நடத்தி வரும் நிலையில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 8 வழிச்சாலையை நெடுஞ்சாலையை ஆணையம் தெரிவித்த கருத்துப்படி 6 வழிச்சாலையாக மாற்றும்பட்சத்தில் பெரும்பாலான விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது தவிர்க்கப்படும். இதனை ஆராய்ந்து பொதுமக்களை வஞ்சிக்காத வகையில் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், மின் மிகை மாநிலம் என பெருமை பேசும் தமிழக அரசு தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டு பிரச்சினையில் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மக்களே தெரிந்து கொண்டு வருகின்றனர். அதற்கேற்றார் போல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்தியாவிற்காக 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்ற தருண் அய்யாசாமியை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கூறினார்.