மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை பேட்டால் அடித்துக் கொன்ற மனைவி

கோவை : கோவையில் மது போதையில் மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை, ஆத்திரமடைந்த மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவையில் மது போதையில் மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை, ஆத்திரமடைந்த மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் உமாதேவியின்(38) கணவர் ஞானம்(42). இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் மாலினி என்ற மகளும், 7 வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர். கணவர் ஞானம் தொடர்ந்து தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அதேபோல இவர் தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து சித்திரவதை செய்தும் வந்துள்ளார். 

இந்த நிலையில் வழக்கம்போல மதுபோதையில் வந்த கணவன், மனைவியையும் குழந்தைகளையும் சித்ரவதை செய்துள்ளார். மேலும், தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வீட்டில் உள்ள பொருட்களை உடைத்ததுடன் மனைவியை அடித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி உமாதேவி, கிரிக்கெட் பேட்டால் தனது கணவரை அடித்துள்ளார். தலையில் அடிபட்டதால் மயங்கி விழுந்த ஞானம், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து, செட்டிபாளையம் காவல் துறையினர் உமாதேவியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை பேட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...