நீலகிரி : உதகை நகர பகுதியில் உலா வரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக உதகை நகரில் சுற்றித் திரியும் காட்டெருமை சாலைகளில் இரவு, பகலாக உலா வருவது வாடிக்கையாகி விட்டது. காட்டெருமை நகரில் பல்வேறு பகுதியில் உலா வந்து கொண்டிருப்பதும் வனத்துறையினர் அதை விரட்டி வருவதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு சரியான கண் பார்வை இல்லை என்பதால் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும், சாலைகளில் செல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
எனவே, மனித உயிர்கள் பலியாவதற்கு முன் ஒற்றையாக திரியும் காடெருமையை மசினகுடி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.