கோவை : இந்து மதத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 17ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டனர்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தடுப்புக்காவல் சட்டமான உபா உள்ளிட்ட 3 பிரிவுகளில் வெரைட்டி ஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அதில், சென்னையை சேர்ந்த சலாவுதீன், சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்மாயில், கோவையைச் சேர்ந்த ஆசிக் ஆகிய 5 பேரை மட்டும் வரும் 17 ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெரைட்டி ஹால் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில், மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் கைதான 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பின்னர், போலீஸ் காவலுக்கு அழைத்து செல்லபட்ட ஐந்து பேரை திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு காவல் முடிந்து ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் விசாரணையில் உள்ளவர்களை பார்க்க விசாரணை அதிகாரி அனுமதிக்கவும் நீதிபதி அறிவுறுத்தினார்.