கோவை : சிறுவாணி சாலையில் இருந்த மரத்தினை வெட்டும் காருண்யா பல்கலைக்கழகத்தின் முயற்சியை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.
கோவை : சிறுவாணி சாலையில் இருந்த மரத்தினை வெட்டும் காருண்யா பல்கலைக்கழகத்தின் முயற்சியை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

சிறுவாணி சாலையில் இருந்த மரத்தினை காருண்யா பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் சிலர் வெட்ட முயன்றனர். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனையறிந்த சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.