நீலகிரி : எந்தவித முன்னறிவிப்போ, தகவலோ இல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்த எருமாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நீலகிரி : எந்தவித முன்னறிவிப்போ, தகவலோ இல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்த எருமாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏ.நஷாரூதின் எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 6-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 19 வரையிலும், ஆக.,23 முதல் செப்., 06-ம் தேதி வரை அப்பள்ளியின் ஓவிய ஆசிரியரும், ஆசிரியர் நலச் சங்கத்தின் தலைவருமான எஸ்.ஏ., ராஜ்குமார் எந்தவித தகவலும் இன்றி நீண்ட விடுப்பு எடுத்துள்ளார். இதனைக் கண்ட அதிகாரி, எஸ்.ஏ., ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த விடுமுறை நாட்களில் கிடைக்கும் படிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எஸ்.ஏ., ராஜ்குமார், "இந்தப் பிரச்சனைக்க என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருது பெற்றதற்கு எதிராக நான் புகார் அளித்திருந்தேன். பள்ளி சார்பில் வழங்கப்பட்ட விடுமுறையுடன் எனது சொந்த விடுப்பைத்தான் நான் எடுத்துக் கொண்டேன். என்னுடைய முழு கோபத்தையும் நான் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் காண்பிப்பேன்," என்றார்.
அதேவேளையில், கடந்த 7-ம் தேதி முதல் எனக்கு சஸ்பெண்ட் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான் 10-ம் தேதி பணியில் இருக்கும் போதுதான் இந்த உத்தரவு தனக்கு கிடைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.