திருப்பூர்: எலாஸ்டிக் உற்பத்தி செய்ய தேவையான ரப்பர் மற்றும் நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், 10,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ரப்பர் விலை கடந்த வாரம் முதல் அதிகளவில் உயர்ந்துள்ளதாகவும், நூல் விலையும் உயர்ந்து வருவதாகவும் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, எலாஸ்டிக் தயாரிக்க தேவையான ரப்பர் மற்றும் நூல் ஆகியவை தொடர்ந்து விலை உயர்வில் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
அதேபோல, பின்னலாடை நிறுவனங்கள் எலாஸ்டிக் பொருட்களை வாங்கும் போது தவணைக்காலத்தை குறைந்த கால தவணையாக மாற்ற முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒருநாள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், திருப்பூரில் 1.5 கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு 5 கோடி வரையிலான வர்த்தக பாதிப்பும் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.