கோவை: கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள கொடிசியா பகுதியில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு செல்ல அனுமதி மறுப்பது, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்வது, மாணவிகளுக்கான சுதந்திரம் பறிப்பு மற்றும் விடுதியில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் கெடுபிடி செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், பி.எஸ்.ஜி., கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவன் கூறுகையில், "நிர்வாகத்தின் நடவடிக்கைகளை எங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றார். இதனிடையே, மாணவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடையே உறுதியளித்துள்ளது.