கோவை: உள்ளாட்சி துறையில் ஊழல் நடைபெற்றதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தி.மு.க., தலைவர் பதவியை அழகிரிக்கு விட்டுத்தர தயாரா..? என அமைச்சர் எஸ்.பி., வேலுமணி சவால் விடுத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தி.மு.க., ஆட்சியில் 18 மணிநேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது, தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் எங்கும் மின்வெட்டே இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் விரட்டியடிக்கப்பட்டவர் டி.டி.வி., தினகரன். அனைத்து சிறைகளையும் பார்த்த அவர், மீண்டும் சிறைக்கு செல்ல தயாராக உள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்வதை கேட்டு தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.,பாரதி பியூன் வேலை பார்க்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல்களை நிரூபித்தால் அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளில் இருந்து இன்றே விலகத் தயார். அதேசமயம், ஊழலை நிரூபிக்க முடியவில்லையெனில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி, துரைமுருகன், அழகிரிக்கு கொடுக்கத் தயாரா..?, இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.