நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை சுற்றி போடப்பட்டுள்ள மின்வேலிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடங்களில் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இதைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் சுற்றி உள்ள சோலார் மின்வேலிகள் உள்ளிட்ட வேலிகள் யானைகள் செல்ல தடையாக இருப்பதால், அதனை அகற்றுவதற்கு கடந்த இரண்டு நாட்களாக விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட 48 மணிநேர கெடு இன்றுடன் முடிந்த நிலையில், சோலார் மின்வேலி மற்றும் இதர வேலிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் வருவாய்துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.
இன்று வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் அகற்றும் பணி நடைபெறும் என்றும், தொடர்ச்சியாக மற்ற பகுதியில் உள்ள வேலிகளை அகற்றும் பணி நடக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருசில விடுதிகளில் உரிமையாளர்களே தாமாக முன்வந்து வேலியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.