நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடங்கவிருக்கும் இரண்டாம் சீசனுக்காக, கர்நாடக வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பூங்கா தயாராகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும், ஆண்டோன்றுக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, தொட்டப்பெட்டா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சிமுனை, உதகை படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை மலை ரயில் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவைகளை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பூங்கா திறக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் சீசனுக்காக இந்தப் பூங்காவை தயார்ப்படுத்தும் பணியினை கர்நாடாக வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்கா உதகைக்கு வரும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது