மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தக் கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது 'நோட்டா' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் 'நோட்டா' வாக்குச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் மாநில, யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்களவை மற்றும் சட்ட மேலவை தேர்தல்களில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது.
தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டில் 'நோட்டா' பிரிண்டிங் செய்யப்படக்கூடாது, என தெரிவித்துள்ளது.