நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடையாக இருக்கிறது : கோவையில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் பேச்சு

கோவை : நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-ம் ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தெரிவித்தார்.

கோவை : நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-ம் ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கடந்த 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று நடைபெற்ற சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர், டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என தனது உரையை பேச தொடங்கினார். அவரது இந்த சொற்பொழிவு இந்திய மக்களின் சுய மதிப்பையும், தன்னம்பிக்கையினையும் புதுப்பித்தது. உலக பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வின் 125 ஆண்டு நினைவு விழா, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலையாவில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், 125 கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இடையே நடத்தப்பட்ட மனனம், கட்டுரை, மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.



ஆங்கிலத்தை காட்டிலும் இனிமையான மொழி தமிழ் மொழி என தமிழில் தனது உரையை தொடங்கிய ஆளுநர் கூறியதாவது :- நான் பல ஆண்டுகளாக விழாக்களில் பேசிய போது சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவை குறிப்பிடும் போது டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆப் அமெரிக்கா என பேச்சை தொடங்கினார் என்றே பேசி வந்தேன். ஒரு முறை வழக்கம் போல் நான் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது தான் ஒருவர் எழுந்து எனது தவறை சுட்டிக்காட்டி, விவேகானந்தர் டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்றே தனது சிகாகோ சொற்பொழிவை தொடங்கினார் எனக்கூறினார்.



அன்று முதல் என்னை நான் திருத்திக்கொண்டேன். விவேகானந்தரின் ஆன்மீக பாதையில் பயணிப்பவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது ஊழல். பொறுப்பில் உள்ளவர்கள் வீண் ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ விரும்பினால் ஊழல் குறித்த சிந்தனையே வராது அவரிடம் நேர்மை தானாக வந்து சேரும். நேர்மையாக இருக்க விரும்புவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும், இறுதியில் அவரே வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இளைய தலைமுறையினர் விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்து காட்டியதை போல தங்களது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். இவை இரண்டும் உங்களிடம் இருந்தால் வெற்றியும் துணிவும் உங்களை தேடி வரும், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...