மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் : கோவை மாநகராட்சிக்கு உத்தரவு

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, சூயஸ் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக, மாநகராட்சி மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. மேலும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இதுகுறித்த தகவல்களைக் கேட்டாலும், தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படாமலேயே இருந்தன.

இதையடுத்து, கோவை மாநகராட்சி இணையதளத்தில் தீர்மான நகல்கள் பதிவேற்றாமல் இருப்பது குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இருதரப்பினரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணைய க. விஜயகார்த்திகேயனுக்கு உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவிட்டது. 

மேலும், மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படாமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே, கோவை மாநகராட்சியில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் மேற்கொள்வதுடன், 2017-ம் ஆண்டு ஜூலை முதல், தற்போது வரை மன்றத் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...