குன்னூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து : சென்னையைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

நீலகிரி : குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விபத்தில் சென்னையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீலகிரி : குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விபத்தில் சென்னையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பொள்ளாச்சிக்கு திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதகைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக, சென்னையிலிருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தங்களது இருசக்கர வாகனங்களை கோவைக்கு கொண்டு வந்தனர். திட்டமிட்டபடியே, திருமணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிகாலை பொள்ளாச்சியிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில் 5 பேர் உதகைக்கு சென்று பொழுதைக் கழித்தனர். பின்னர், சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அர்விந்த் (21), அஜித் (21) ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் காந்திபுரம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தது. 

இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே இது குறித்து குன்னுார் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், உடலில் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்த அரவிந்த் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்கு நண்பர்களுடன் வந்த இடத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...