நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டி சோலை பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது.

இதனால், அங்குள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மற்றொரு தனியார் தொழிற்சாலை பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.
மேலும், சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றும், கோவில் பகுதியில் குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.