கோவை: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிடும் என அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "வாகன எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த வேண்டும். 85 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை மாற்றியமைக்க வேண்டும். காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகா தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துகிறது.
காவிரி விவகாரத்தில் தினந்தோறும் நதி நீர் பங்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தினந்தோறும் நீர் பங்கீடு என மாற்றப்பட்டால், மேகதாது அணை கட்ட வேண்டுமென்ற எண்ணம் கர்நாடகாவிற்கு வராது.
கள் மீதான தடையை விலக்கக் கோரி வருகின்ற 2019 ஜனவரி 21-ம் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும். அந்த யாகம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். தமிழகத்தில் நீர்பாசனத்திற்கு என தனித்துறை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் நீரா பானம் திட்டம் தோல்வியடைந்துள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள் இயக்கம் போட்டியிடும்." என்றார்.