கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நோகு என்ற மாங்காவு ரஷீத். இவர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரை சுமார் இருபதாண்டு காலமாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர் மீது பெரியகடை வீதி பி1 காவல் நிலையத்தில், வெடி பொருள் உபகரணச்சட்டம் 1908, பிரிவு 25(1-பி)(ஏ) உட்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடப்பட்டு வந்த குற்றவாளியான இவர், வெளிநாடுகளில் சுற்றி தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குற்றவாளி ரஷீத் டெல்லியில் இருந்து சென்னை வரும் போது சி.பி.சி.ஐ.டி சிறப்பு படையினர் துப்பாக்கி முனையில் அவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.