நீலகிரி: உதகையில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போது இந்த வளாகத்திற்குள் வன விலங்கு குடியேறத் தொடங்கியுள்ளதால் இப்பகுதியைச் சுற்றி உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஐந்தாயிரம் தொழிலாளர்களுடன் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நடமாட்டமின்றி பாழடைந்து கிடக்கும் இந்த தொழிற்சாலையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
குறிப்பாக காட்டெருமை, கரடி இந்த கட்டிட வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள. இந்த நிலையில், இன்று காலை தொழிற்சாலையின் பின்பக்கம் உள்ள கேட்டின் மீது ஏறி குதித்து ஒரு சிறுத்தை உள்ளே நுழைந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர். இது குறித்து வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலைக்குள் ஏற்கனவே கரடிகள் நடமாட்டம் இருப்பதால், தற்போது சிறுத்தையும் இத்தொழிற்சாலை வளாகத்திற்குள் குடியேறி உள்ளதால் தொழிற்சாலையை மீண்டும் புனரமைத்து பயன்படுத்த முடியுமா? என்று கேள்வியெழுப்பும் மக்கள், சிறுத்தை மக்களை தாக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.