இரவு நேரத்தில் தூங்கும் வனத்துறையின் டிரோன் விமானங்கள்: இயக்க தெரியாததால் விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதில் தொய்வு

கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட டிரோன் விமானத்தை இயக்க வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு பயிற்சியளிக்காத காரணத்தால் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கோவை, கூடலூர் மற்றும் ஊட்டியில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு இரண்டு டிரோன் விமானங்கள் ரூ.12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டன. இந்த டிரோன் விமானங்கள் மூலம் யானை நடமாட்டங்களைக் கண்காணிக்க முடிகிறது.

வெற்றிகரமான இந்த முயற்சியைத் தொடர்ந்து மேலும், ஒரு டிரோன் விமானம் வாங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த டிரோன் விமானங்கள் இன்பேரட் மூலம் தொடர்புப்படுத்தப்பட்டு, யானைகள் நடமாட்டம் தொடர்பான காணொளியை நேரடியாகப் பார்க்க உதவுகிறது. இதனால் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பகல் நேரங்களில் மட்டும் இந்த விமானங்கள் அதன் பராமரிப்பாளர்களால் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணியில் இருக்கும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு இதனை இயக்கம் பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விரைவில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு டிரோன் விமானத்தை இயக்குவது தொடர்பான பயிற்சி வகுப்பு அளிக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...