சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவை : 6-வது நாளாக கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே அமராவதி சா்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கஞ்சிதொட்டி திறந்து 6-வது நாளாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர்

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே அமராவதி சா்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கஞ்சிதொட்டி திறந்து 6-வது நாளாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள் 270 பேருக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்காமல் உள்ளது. இதனால், ஆலையின் பணியாளா்கள் கடந்த 6-ம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சா்க்கரை ஆலைக்கு வந்த ஊழியா்கள் ஆலைமுன் தொடா் கண்டன ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தவித போராட்டத்திற்கும் ஆலை நிா்வாகம் செவிசாய்க்காததால் இன்று 6-வது நாளாக கஞ்சிதொட்டி திறந்து போராட்டம் நடத்தினா்.



ஊழியா்கள் தொடா் போராட்டத்தால் அமராவதி சா்க்கரை ஆலை இயக்கப்படாமல் உள்ளதால் பெருமளவில் கரும்புகள் தேக்கமடைந்து வீணாகும் சூழல் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊதியம் வழங்காத காரணத்தால் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை என்றும், குடும்பம் நடத்த முடியாமல் அவதிபட்டு வருவதாகவும், உணவுக்கு கூட பொருட்கள் வாங்க முடியாத நிலையை ஆலை நிா்வாகம் உருவாக்கி விட்டதால் முழுமையாக 5 மாத ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.



ஆலையில் கரும்பு கழிவுகளில் இருந்து எடுக்கபடும் மொலாசீஸ் மூலம் ரூ.30 கோடிக்கு அதிகமாக வருமானம் கிடைக்க பெறும் நிலையிலும் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டுகின்றனா்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...