திருப்பூர் : திருப்பூரில் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சினையால் அதிமுக பிரமுகர் நடுரோட்டில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருப்பூர் மாநகராட்சி 28 வது வார்டு அதிமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். உணவகம் நடத்தி வரும் இவர், அப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் அவரிடம் பணம் பெற்ற சிலரிடம் பணம் வசூல் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சென்றுள்ள இளங்கோவிற்கும் கடன் பெற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இளங்கோவைத் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திருநீலகண்டபுரம் இரண்டாவது வீதி அருகே வரும்போது ஆயுதங்களுடன் இளங்கோவை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் இளங்கோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவத்தைக் கண்டித்து இளங்கோவின் நண்பர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் ஆணையர் அண்ணாதுரை தலைமையிலான போலிசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர். நடுரோட்டில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.