வால்பாறையில் தொலைபேசி ஆர்டர் மூலம் வீட்டிற்கே மது டெலிவரி செய்யப்படும் அவலம்

கோவை: வால்பாறையில் திரும்பிய பக்கமெல்லாம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை: வால்பாறையில் திரும்பிய பக்கமெல்லாம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். விலங்கு மனித மோதல்களால் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருந்த மக்கள் தற்போது 40 ஆயிரம் பேராக குறைந்திருக்கிறது. இங்கு தமிழக அரசின் சார்பில் 15 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. மக்கள் போராட்டத்தை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. 



வால்பாறையிலிருந்து சோலையார்டேம் செல்லும் வழியில் ரொட்டிக்கடை அருகே உள்ள பாறைமேடு பகுதியில் இரண்டு மதுபான கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மது பிரியர்கள் மது வாங்க வேண்டுமானால் வால்பாறை பகுதியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் சென்று வாங்கி வரவேண்டும். இந்நிலையில் அரசு மதுபான கடையில் இருந்து மதுவை வாங்கி புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை, அம்மா உணவகம் பின்புறம் கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது. குடிமகன்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் செல்லாமல், நகரத்திற்கு உள்ளாகவே மது கிடைப்பதால், அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். 



அனைத்து கட்சிகளும் மது விஷயத்தில் ஒன்று கூடியதால், தற்போது வரை வால்பாறை நகருக்குள் அரசு மதுபான கடை வராமல் தடுத்து வருகின்றனர். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மது ஆர்டர் செய்தால், வீட்டிற்கே வந்து, கொடுத்துச்செல்ல விற்பனை பிரதிநிதிகள் உள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. 

மேலும், இந்த மது விற்பனையில் ஒரு தொகை காவல் நிலையத்திற்கும், உயர் அதிகாரிகளுக்குச் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் தமிழ்நாடு மதுபான வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...