இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தா.பாண்டியன் (85). இவர், மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில வாரங்களாக அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும், அடிக்கடி டயாலிசிஸ் செய்தும் வருகிறார்.
இந்த நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக தா.பாண்டியன் மீண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.