திருப்பூர்: திருப்பூரில் வேலை பறிபோன விரக்தியில் 18 வயது இளைஞர் சாலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (18). தாய்-தந்தை இல்லாத இவர் திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தனியார் (பாஸ்ட் புட்) உணவகத்தில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவ்வப்போது தனது தேவைக்கு அருள்பிரகாஷ் உணவகத்தில் திருடியுள்ளார். இதனை அறிந்த உரிமையாளர் பல முறை அவரை எச்சரித்துள்ளார். தொடர்ந்து, உணவகத்தின் வருமானம் போதிய அளவில் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக்கொள்ளுமாறும் உணவகத்தின் உரிமையாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தங்கி வேலை பார்த்து வரும் உணவகம் மூடப்பட உள்ளதால் வேலை இன்றி அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்த அருள்பிரகாஷ் ஆதரவில்லாத நிலையில் மனமுடைந்து, இன்று குமார் நகர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்குப் போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.