மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடகா குமாரசாமி நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா அரசு காவிரியில் 5-வது அணையாக மேகதாது அணையை ரூ. 5, 912 கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவததில் பாரபட்சம் காட்டும் கர்நாடக அரசை, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். காலதாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசுடனான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.