மலப்புரம்: கேரளாவில் மீட்பு பணியின் போது ஒரு பெண் படகில் ஏறுவதற்காக தண்ணீரில் குனிந்து தனது முதுகை படிக்கெட்டாக்கிய மீனவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

மலப்புரம் மாவட்டம் வென்கரா பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்த வீடுகளில் இருந்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம் இறங்கினர். ஒரு இடத்தில் தேசிய மீட்பு படையினரின் ரப்பர் படகில் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் ஒருவர் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்த கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார்.
அவர் மீது ஏறி, அந்தப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். இந்தப் படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவியதால் அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளது.