திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியில் வசித்து வருபவர் நாகராஜ். விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரண்டரை வயதுடைய ஷிவன்யா ஶ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில், நேற்றிரவு பணி முடிந்து திரும்பி வந்த நாகராஜ், வீட்டின் உள் சென்று பார்த்த போது தமிழ்ச்செல்வி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை எழுப்பி விசாரித்த போது, யாரோ தன்னை தாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தையைத் தேடிய போது வீட்டின் உள் நீர் நிரப்பியிருந்த டிரம்மில் குழந்தை மூழ்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை மீட்ட நாகராஜ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். அங்கு குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலம் போலீசார் நாகராஜ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டினுள் இருந்த டிரம்மில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.